அரிதான நோய் - இந்தியாவில் உயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்
21 சித்திரை 2026 செவ்வாய் 13:42 | பார்வைகள் : 1522
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷபூர் ஜத்ரான் அரிதான நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருகிறார்.
ஆப்கானிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷபூர் ஜத்ரான்(shapoor zadran), அந்த அணிக்காக 75 சர்வதேச போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத அவர், கடந்த அக்டோபர் மாதம் முதலே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவர்கள் அறிவுரையின் பேரில், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவின் டெல்லிக்கு வந்து சிகிச்சை பெற்றார்.
உடல் நிலை தேறியதும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தகவல்.வெளியாகியுள்ளது.
ஷபூர் ஜத்ரான், 'ஹெமோபாகோசைடிக் லிம்ஃபோஹிஸ் டியோசைடோசிஸ்’ (HLH) என்ற அரிய வகை நோய் எதிர்ப்பு குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலும் குழந்தைகளையே பாதிக்கும் இந்த நோய், ஷபூர்ஜத்ரானை தாக்கியுள்ளது. இது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் சீர்குலைத்து, அளவுக்கு அதிகமாகச் செயல்படுவதால் ஏற்படும் ஒரு தீவிரமான நோயாகும்.
இதன் விளைவாக, உடலில் கடும் வீக்கம் ஏற்பட்டு, எலும்பு மஜ்ஜை, கல்லீரல், மண்ணீரல் மற்றும் நிணநீர் முனைகள் உள்ளிட்ட உடல் திசுக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
மேலும், அவருக்கு காச நோய் இருந்ததாகவும், அது அவரின் மூளை வரை பரவியிருந்ததாகவும் அவரின் சகோதரர் கமர் ஜத்ரான்தெரிவித்துள்ளார்.
ஷபூர் ஜத்ரான் குணமடைய ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire