மீண்டும் இணையும் சித்தார்த் - த்ரிஷா ஜோடி?
21 சித்திரை 2026 செவ்வாய் 16:13 | பார்வைகள் : 1870
தென்னிந்திய திரையுலகில் என்றுமே ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான ஜோடிகளில் ஒன்று சித்தார்த் மற்றும் த்ரிஷா கூட்டணி. இவர்கள் இருவரும் இணைந்து திரையில் தோன்றும்போதெல்லாம், அந்தப் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் வரவேற்பும் கிடைப்பது வழக்கம்.
சித்தார்த் - த்ரிஷா ஜோடி முதன்முதலில் 2004-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் இணைந்தது. அப்படம் வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், திரையில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒர்க்-அவுட் ஆகி இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, 2005-ம் ஆண்டு பிரபுதேவா முதன்முதலாக இயக்குநராக அறிமுகமான 'நுவ்வோஸ்தாண்டே நேனோதண்டானா என்ற தெலுங்குப் படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்தது. திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட இப்படம், மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பதிவு செய்தது. இன்றுவரை தெலுங்கு சினிமாவின் கல்ட் கிளாசிக் காதல் படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் இப்படம், இருவருக்கும் டோலிவுட்டில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கித் தந்தது.
அந்த பிளாக்பஸ்டர் படத்திற்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'அரண்மனை 2' திரைப்படத்தில் தான் சித்தார்த்தும் த்ரிஷாவும் மீண்டும் இணைந்து நடித்திருந்தனர்.
தற்போது, 'அரண்மனை 2' வெளியாகி சுமார் 10 ஆண்டுகள் கழித்து, இந்த எவர்கிரீன் ஜோடி மீண்டும் ஒரு புதிய தெலுங்குப் படத்தில் இணையவுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. விரைவில் இந்தப் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire