இலங்கையர்களின் ஆயுட்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
23 சித்திரை 2026 வியாழன் 17:20 | பார்வைகள் : 1840
தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார்.
நாளை (24) முதல் ஆரம்பமாகும் உலக நோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வைத்தியர் பாலித கருணாபேம இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
"நாங்கள் ஏப்ரல் 24 முதல் 30 வரை உலக நோய் எதிர்ப்பு வாரத்தைக் கொண்டாடுகிறோம். நோய் எதிர்ப்புத் தன்மையில் இலங்கை மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டில் தேசிய தடுப்பூசி திட்டம் நடைமுறையில் உள்ளது.
இதன் காரணமாக தடுப்பூசிகள் மூலம் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். போலியோ, பிறந்த குழந்தைகளுக்கான Neonatal tetanus மற்றும் ருபெல்லா போன்ற நோய்களை இலங்கையிலிருந்து ஒழிக்க முடிந்தது. தடுப்பூசிகள் காரணமாக ஏனைய நோய்களைத் தடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்காரணமாக, கடந்த 15 ஆண்டுகளில் ஆயுட்காலம் அதிகரிக்கவும், குழந்தை இறப்பு வீதம் குறையவும் தேசிய தடுப்பூசி திட்டம் முக்கியமானதாக அமைந்துள்ளது."
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire