Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் 21 மாவட்டங்களில் நாளை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இலங்கையில் 21 மாவட்டங்களில் நாளை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

23 சித்திரை 2026 வியாழன் 18:09 | பார்வைகள் : 2012


இலங்கையில்  வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் நாளை (24) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மனித உடலில் உணரப்படும் வெப்ப நிலை சில பகுதிகளில் “எச்சரிக்கை நிலை” வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், 21 மாவட்டங்களில் மக்கள் நீண்ட நேரம் வெளியில் இருப்பின் சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், தொடர்ச்சியான வெளிப்புற செயற்பாடுக ளினால் தடைபிடிப்பு ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற செயல்பாடுகளை குறைத்து, போதிய நீர் அருந்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.