அமெரிக்காவில் பெண் ஒருவரை சுட்ட நாய் - ஒரு அசாதாரண சம்பவம்
27 வைகாசி 2026 புதன் 16:28 | பார்வைகள் : 1648
அமெரிக்காவில், பெண்ணொருவரை நாய் ஒன்று சுட்டதைக் குறித்த அசாதாரண செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சனிக்கிழமையன்று, அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் பெண்ணொருவர் சுடப்பட்டதாக தகவல் கிடைத்தத்தையடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
ட்ரக் ஒன்றிலிருந்து குண்டு பாய்ந்ததாக கூறப்பட்டதால், அந்த ட்ரக்கை சோதனையிடச் சென்றுள்ளார்கள் பொலிசார்.
அப்போது ட்ரக்கின் கதவு வழியாக குண்டு வெளியேறியது தெரியவந்துள்ளது. பொலிசார் ட்ரக்கை சோதனையிட, ட்ரக்குக்குள் ஒரு நாய் மட்டுமே இருந்துள்ளது.
அதாவது, அந்தக் காரின் உரிமையாளர் லோட் செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றை ட்ரக்குக்குள் வைத்துள்ளார்.
அவர் ட்ரக்கை நிறுத்திவிட்டு அருகிலிருந்த கடை ஒன்றிற்குச் சென்றுள்ளார். அப்போது, ஒரு பெண் தனது காரை அந்த ட்ரக் பக்கத்தில் நிறுத்திவிட்டு காருக்குள் அமர்ந்திருந்திருக்கிறார்.
ட்ரக்குக்குள் இருந்த நாய் திடீரென ஒரு பக்கத்திலிருந்து மற்ற பக்கத்துக்கு குதிக்க, அதன் கால் துப்பாக்கியில் பட்டதால் துப்பாக்கி வெடித்துள்ளது.
அந்த குண்டு, காரின் கதவு வழியாக வெளியேறி, அருகில் நின்றுகொண்டிருந்த காரின் அமர்ந்திருந்த பெண்ணின் கையில் பாய்ந்துள்ளது.
அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ள நிலையில், அவருக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire