மின்சார நிறுவனங்களின் குறைந்த சந்தா திட்டங்கள் அறிவிப்பு: 60% வரை தள்ளுபடி!!
27 வைகாசி 2026 புதன் 13:38 | பார்வைகள் : 3578
ஜனாதிபதி Emmanuel Macron, நாட்டை மின்மயமாக்கும் முயற்சியை வேகப்படுத்த வேண்டும் என்றும், மக்கள் மின்சார பயன்பாட்டை இயல்பாக ஏற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக எரிபொருளை சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, மின்சார வாகனங்கள் மற்றும் மின்சார பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Stellantis நிறுவனம் 2029ஆம் ஆண்டில் புதிய தலைமுறை வாகன உற்பத்திக்காக 1 பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், மக்கள் மின்சாரத்திற்கு மாற ஊக்கமளிக்க, நிலையான மற்றும் குறைந்த கட்டண மின்சார திட்டங்கள் தேவை என மக்ரோன் தெரிவித்துள்ளார்.
EDF, Engie, TotalEnergies உள்ளிட்ட மின்சார நிறுவனங்கள் “சூப்பர் குறைந்த மின்பாவனை நேரங்கள்” (heures super creuses) என்ற புதிய சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளன. குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பாக கோடைக்கால மதிய நேரங்களில், மின்சார கட்டணத்தில் 60% வரை தள்ளுபடி வழங்கப்படும்.
பிரான்ஸில் மொத்த சந்தையில் மின்சார விலை ஐரோப்பாவின் பல நாடுகளை விட குறைவாக இருந்தாலும், பொதுமக்கள் தங்கள் மின்சார கட்டணத்தில் அதனை உணரவில்லை. இதனால், மின்சார வரிகளை குறைக்க வேண்டும் என்று சில துறை பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது மின்சாரத்திற்கு, எரிவாயு அல்லது எரிபொருளை விட அதிக வரி விதிக்கப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் மக்ரோன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire