சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி: நாடு முழுவதும் 22 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் குவிப்பு!!
28 வைகாசி 2026 வியாழன் 07:30 | பார்வைகள் : 4132
Budapest நகரில் PSG மற்றும் Arsenal அணிகளுக்கு இடையே சனிக்கிழமை நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை முன்னிட்டு நாடு முழுவதும் 22 ஆயிரம் காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர்கள் பாதுகாப்பு பணிக்காக களமிறக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் லோரன் நுன்யெஸ் தெரிவித்துள்ளார். இதில் பரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 8 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடவுள்ளனர்.
புதன்கிழமை 27ம் திகதி வெளியிட்ட நேர்காணலில் அவர் தெரிவித்ததாவது, சனிக்கிழமை நடைபெறவுள்ள PSG மற்றும் Arsenal அணிகளுக்கிடையேயான போட்டி பொதுமக்கள் ஒழுங்குக்கு அதிக ஆபத்தான ஒன்றாக கருதப்படுவதால் மிகப்பெரிய பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றார். மேலும், Champs-Elysées வீதி பிற்பகல் முதல் போக்குவரத்துகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியின் போது பரிஸில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்தன. குறிப்பாக Champs-Elysées பகுதியிலும், போட்டி ஒளிபரப்பான Parc des Princes மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கலவர நிலை ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire