பரிஸ் உட்பட இல் து பிரான்சின் பல பகுதிகளில் நாளை செம்மஞ்சள் எச்சரிக்கை!!
28 வைகாசி 2026 வியாழன் 21:53 | பார்வைகள் : 4993
நாடு முழுவதும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, மே மாதத்திற்கான புதிய வெப்ப சாதனை இன்று பதிவாகியுள்ளது. Météo-France வெளியிட்ட தகவலின்படி, Charente மாகாணத்தின் Angoulême-La Couronne பகுதியில் 37.8°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது பிரான்ஸில் மே மாதத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பமாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு, கோர்ஸிகா தீவிலுள்ள Sollacaro பகுதியில் பதிவான 37°C தான் தேசிய சாதனையாக இருந்தது.
மேலும், பரிஸ் உட்பட்ட இல் து பிரான்சின் பல பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை” அறிவிக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை முதல் வடமேற்கு பகுதிகளில் வெப்பம் படிப்படியாக குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் வெப்பம் தொடரும் என்றும், பரிஸில் கூட 34 முதல் 35°C வரை வெப்பம் நிலைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதிக்குள் வெப்ப அலை மெல்ல குறையும் நிலையில், மத்தியதரைக் கடல் கரையோர பகுதிகளில் மட்டும் அதிக வெப்பம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire