GT அணி வீரர்கள் பயணித்த பேருந்தில் தீ - சாலையில் அமர்ந்த வீரர்கள்
1 ஆனி 2026 திங்கள் 12:15 | பார்வைகள் : 1687
GT அணி வீரர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 31.05.2026 நேற்று நடைபெற்ற 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்(GT) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB) அணிகள் மோதியது.
5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB அணி, தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
போட்டி முடிந்த பின்னர் GT அணி வீரர்கள் மைதானத்திலிருந்து தங்கும் விடுதிக்கு செல்லும் போது அவர்கள் பயணித்த பேருந்தில் மின்கசிவு காரணமாக தீ பற்றியுள்ளது.
பேருந்தில் புகை பரவ தொடங்கிய நிலையில், உடனடியாக வீரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன் பின்னர் வீரர்கள் மாற்று பேருந்து மூலம், தங்கும் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதுவரை வீரர்கள் சாலையில் அமர்ந்துள்ளனர். சாலையில் அமர்ந்துள்ள புகைப்படத்தை முகமது சிராஜ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire