மாரி செல்வராஜ் தமிழ் நடிகைகளை புறக்கணிக்கிறாரா ?
2 ஆனி 2026 செவ்வாய் 15:46 | பார்வைகள் : 1410
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'மஞ்சணத்தி' படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். பிரியங்காமோகன், கயாடுலோஹர் ஆகியோர் நடிக்கிறார்கள். இருவரும் இந்த படத்தில் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தனது வழக்கமான பாணியில், நெல்லை, கிராம பின்னணியில் இந்த படத்தை அவர் எடுப்பதாக தகவல். கர்ணன் படத்தில் லால் சம்பந்தப்பட்ட ஒரு பாடலில் மஞ்சணத்தி பற்றிய வரிகள் வருகிறது. லால் காதலை, அவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளை இந்த படத்தில் அவர் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
மாரி செல்வராஜ் படத்தில் இந்த நடிகைகள் நடிப்பதன் மூலம் அவர் தொடர்ச்சியாக தமிழ் நடிகைகளை புறக்கணித்து வருகிறார். அவரின் முதல் படமான பரியேறும் பெருமாளில் ஆனந்தி நடித்தார். கர்ணனில் ரஜிஷா விஜயன் நடித்தார். வாழை படத்தில் நிகிலா விமல் இருந்தார். பைசன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்தார். இந்த படங்களில் தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அவரின் மாமன்னன் படத்தில் மட்டுமே கீர்த்தி சுரேஷ் நடித்தார். அவர் படத்தில் தமிழ் பெண்களுக்கு அக்கா, மற்ற வேடங்களே கிடைக்கின்றன. ஹீரோயினாக நடிக்க வைப்பது இல்லை. கேட்டால், கலைக்கு மொழி கிடையாது என்பார் என்று தமிழ் நடிகைகள் புலம்புகின்றனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire