மாலியில் பிரெஞ்சு உளவு அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!
6 ஆனி 2026 சனி 07:30 | பார்வைகள் : 2268
மாலியில் பணியாற்றியிருந்த பிரெஞ்சு உளவு அமைப்பு அதிகாரி ஒருவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. “அரசின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டார்” என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சுமார் 10 மாதங்களாக பமாகோவில் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை “அடிப்படையற்றவை” என மறுத்துள்ளது. குறித்த அதிகாரி பாதுகாப்பு ஒத்துழைப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், பிரான்ஸ் எந்த விதத்திலும் மாலி நாட்டை அசைத்திடும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கிற்கு விரைவான தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
2025 ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்ட அந்த பிரெஞ்சு அதிகாரி மீது, மாலி அரசியல் அமைப்புகளுக்கு எதிராக சதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது இராணுவ ஆட்சி கீழ் செயல்பட்டு வரும் மாலி, பிரான்சுடனான உறவுகளை முறித்த பின்னணியில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், குறித்த நபருக்கு 20 ஆண்டுகள் மாலியில் வசிக்க தடை விதிக்கப்பட்டதுடன், 5,400 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire