நோர்வே செஸ் சாம்பியனான முதல் இந்தியர் - வரலாறு படைத்த பிரக்ஞானந்தா
6 ஆனி 2026 சனி 11:30 | பார்வைகள் : 1446
நோர்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.
14வது நோர்வே சர்வதேச செஸ் போட்டி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த மே 25ஆம் திகதி தொடங்கி ஜூன் 5 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இதில், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான தமிழ்நாட்டை சேர்ந்த டி. குகேஷ், மற்றொரு தமிழ்நாட்டு வீரரான பிரக்ஞானந்தா, அலிரேசா ஃபிரூஜா, வெஸ்லி சோ மற்றும் கெய்மர் ஆகிய 6 பேர் கலந்து கொண்டனர்.
நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம், நோர்வே செஸ் சாம்பியனான பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை 20 வயதான பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.
முன்னதாக உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சனை இந்த தொடரில் 2 முறை வீழ்த்தி, விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு செஸ்ஸில் கார்ல்சனை ஒரே தொடரில் இரண்டு முறை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவிற்கு துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்னன், தொழிலதிபர்கள் கௌதம் அதானி, ஆனந்த் மஹேந்திரா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire