ஜெயிலர் 2-வில் நடந்த பெரிய மாற்றம்!
6 ஆனி 2026 சனி 16:22 | பார்வைகள் : 1248
ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது ஜெய்ஹிந்த் படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். முதல் பாகத்தில் கேமியோ வேடத்தில் நடித்த மோகன்லால், சிவ்ராஜ்குமார் ஆகியோர் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்..
இந்நிலையில்தன், இந்த படத்தில் ஒரு சிறப்பு கேமியோ வேடத்தில் ஒரு பாலிவுட் நடிகரை நடிக்க வைக்கலாம் என படக்குழு திட்டமிட்டது. முதலில் ஷாருக்கானிடம் பேசினார்கள். ஆனால் அவர் ஏதோ சில காரணங்களால் நடிக்கவில்லை. எனவே பவன் கல்யாணிடம் சென்றார்கள். அவரும் மறுத்துவிட்டார்.
அதன்பின் ஹிருத்திக் ரோஷனிடம் பேசப்பட்டதாக சொல்லப்பட்டது. தற்போது யாரைத்தான் வைத்து அந்த காட்சிகளை எடுத்திருக்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும், குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் ஒரு உண்மை வெளியே கசிந்திருக்கிறது. உண்மையில் யாரை வைத்தும் அந்த சிறப்பை காட்சிகளை எடுக்க வில்லையாம். அதாவது அது வேண்டாம். அது இல்லையென்றாலும் படம் நன்றாகத்தான் இருக்கும் என்கிற முடிவுக்கு நெல்சன் வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire