இலங்கையில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழப்பு
7 ஆனி 2026 ஞாயிறு 14:11 | பார்வைகள் : 1452
ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார்.
குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வீட்டில் ஏற்பட்ட தகராறின் போது, மனைவி கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire