70,000 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை புகார்களை முழுமையாக மறுபரிசீலனை செய்ய ஜெரால்ட் டர்மனின் உத்தரவு!!
7 ஆனி 2026 ஞாயிறு 22:30 | பார்வைகள் : 2516
லியான்னா என்ற சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து, குழந்தைகள் மீது நடைபெற்ற பாலியல் வன்முறை மற்றும் பாலியல் தொந்தரவு தொடர்பான அனைத்து புகார்களையும் மீண்டும் ஆய்வு செய்ய பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் உத்தரவிட்டுள்ளார். இந்த பணியை அரசு வழக்கறிஞர்கள் ஜூலை 14க்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 70,000 புகார்கள் மீளாய்வு செய்யப்பட உள்ளன. “அனைத்து வழக்குகளும் முறையாக கையாளப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை,” என்று அமைச்சர் கூறினார். லியான்னா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக ஏற்கனவே பல புகார்கள் இருந்தும், அவர் முறையாக விசாரிக்கப்படாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீதித்துறை அமைப்பின் தவறுகள் குறித்து பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. குழந்தைகள் பாதிக்கப்பட்டும், நீதியால் தங்களை யாரும் கேட்கவில்லை என்று பெற்றோர் உணர்ந்தால், அவர்கள் தாமாகவே நீதியை கையில் எடுக்கும் அபாயம் இருப்பதாக டர்மனின் எச்சரித்தார்.
இந்த விவகாரம் குறித்து ஜூன் 8 அன்று அனைத்து அரசு வழக்கறிஞர்களுடனும் அமைச்சர் அவசரக் கூட்டம் நடத்துகிறார். மேலும், முந்தைய புகார்களில் ஒன்று எவ்வாறு கையாளப்பட்டது என்பதை ஆய்வு செய்ய நீதித்துறை மற்றும் ஜொந்தாமரி ஆய்வுத்துறைகளுக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது; அதன் முதல் அறிக்கை ஜூன் 19 அன்று வெளியாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire