LFI கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு காசோலை திருட்டு வழக்கில் 8,000 யூரோக்கள் அபராதம்!!
8 ஆனி 2026 திங்கள் 16:10 | பார்வைகள் : 2647
Sophia Chikirou, LFI கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், அவர் இணைந்து தொடங்கிய Le Média தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து பரிஸ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நீடித்து வந்தது.
2018 ஆம் ஆண்டு, அவர் இனி நிர்வகிக்காத Le Média நிறுவனத்தின் நிதியை தனது தகவல் தொடர்பு நிறுவனம் Mediascop-க்கு மாற்ற முயன்றதாக நீதித்துறை குற்றம் சாட்டியது. ஆனால் அந்த மோசடி குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் கருதியது.
இருப்பினும், பயன்படுத்தப்படாத காசோலைகளை திருடிய குற்றத்திற்காக சோபியா சிகிரூக்கு 8,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது. அதில் பாதித் தொகை நிபந்தனை அடிப்படையில் (sursis) விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மோசடி வழக்கில் விடுவிக்கப்பட்டாலும், திருட்டு குற்றத்தில் தண்டிக்கப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire