பரிஸ் பாடசாலை துணை பராமரிப்பு சேவையில் 132 பணியாளர்கள் பணிநீக்கம்!!
10 ஆனி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 2309
பரிஸ் நகரில் பாசாலை துணை பராமரிப்பு (Périscolaire) சேவையில் பணியாற்றிய 132 பணியாளர்கள் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 52 பேர் பாலியல் அல்லது பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பான சந்தேகங்களின் பேரில் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை நகரின் மேயரான Emmanuel Grégoire ஜூன் மாதம் 9ம் திகதி வெளியிட்டார்.
இதற்கு முன் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பில் 78 இடைநீக்கங்கள் மட்டும் பதிவாகியிருந்தன. அவற்றில் 31 பேர் பாலியல் அல்லது பாலின வன்முறை குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இடைநீக்கமும் நிர்வாக விசாரணை மற்றும் அரசுத் தரப்பு சட்ட நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்காக சுயாதீன விசாரணைக் குழுவொன்றை அமைக்கப் போவதாக மேயர் அறிவித்துள்ளார்.
முன்னாள் சிறுவர் நீதிபதியான Antoine Garapon தலைமையில் இந்த ஆணைக்குழு செயல்படவுள்ளது. தற்போதைய நிர்வாக அமைப்பில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து, எதிர்காலத்திற்கான பரிந்துரைகளை வழங்க இந்த குழுவிற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire