லிஹானா மரணம் - அவசர முடிவுகளும், பேச்சுகளும் தீர்வல்ல — எமானுவல் மக்ரோன்
10 ஆனி 2026 புதன் 12:42 | பார்வைகள் : 3173
இன்று புதன்கிழமை 10 ஜூன் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு,
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், 11 வயது லிஹானா (Lyhanna) கொலை வழக்கைச் சுற்றியுள்ள பதற்றம் குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாக அரசின் பேச்சாளர் மோத் பிரெகோன் (Maud Bregeon),
«ஒரு துயர சம்பவத்துக்கு சத்தத்தாலும் கத்தலாலும் பதில் சொல்ல முடியாது.»
«அவசர முடிவுகளும், மக்கள் மனப்போக்கை தூண்டும் பேச்சுகளும் இந்த நிலைக்கு ஏற்ற பதில்கள் அல்ல.»
“நிறுவனங்களின் மீது நம்பிக்கை கேள்விக்குறியாகிறது”
லிஹானா வழக்கில் “தெளிவான செயலிழப்புகள்” இருந்தன
இது நாட்டின் நிறுவனங்களின் மீது நம்பிக்கையை பாதிக்கிறது
எனத் தெரிவித்ததோடு மேலும் மக்ரோன்,
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள உணர்ச்சி மற்றும் துயரத்தை பகிர்ந்துகொண்டார்
குடும்பத்துக்கு அன்பும் ஒற்றுமையும் தெரிவித்தார்!
«மரியாதை, ஆதரவு, மற்றும் நாகரிகம் மேலோங்க வேண்டும்.»
எனவும் தெரிவித்துள்ளார்.
முக்கிய சந்தேக நபர் மீது புதிய வழக்குகள்
லிஹானாகொலைக்கான முக்கிய சந்தேக நபர் ஜெரோம் பரெல்லா (Jérôme Barella), தற்போது தென் பிரான்சில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
அவர் மீது புதிய 4 வழக்குகள் திறக்கப்பட்டுள்ளன. மொத்தம் 9 வழக்குகள் அவரைச் சுற்றி உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire