முழுமையாக மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை - பதற்றத்தில் உலக நாடுகள்
11 ஆனி 2026 வியாழன் 08:11 | பார்வைகள் : 1429
ஹோர்முஸ் நீரிணையை, எண்ணெய் டாங்கர்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்துக் கப்பல்களுக்கும் மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளமை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அரிவித்துள்ளது. அதோடு இந்த உத்தரவை மீறி நுழையும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.
வணிகக் கப்பல்கள் தொடர்ந்து பயணித்து வருவதாகக் கூறி ஈரானின் அறிவிப்பை அமெரிக்க மத்திய கட்டளைகமான 'செண்ட்காம்' (CENTCOM) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஆனால், அமெரிக்காவின் கூற்றை மறுத்துள்ள ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஹோர்முஸ் பகுதியில் ஈரானிய கடற்படைக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே "நேரடி மோதல்" ஏற்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறிச் சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற இரண்டு கப்பல்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலைக் கண்டு அமெரிக்கப் படைகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் கூறினாலும், தங்களது போர்க்கப்பல்கள் எதுவும் தாக்கப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக நிலவி வரும் போர்ச் சூழலால் இப்பாதை கடுமையான பாதிப்பைச் சந்தித்து வந்த நிலையில், தற்போதைய முழுமையான மூடல் அறிவிப்பு உலக நாடுகளைப் பெருத்த பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது
ஈரானின் இந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள அமெரிக்க மத்திய கட்டளையகம், வர்த்தகக் கப்பல்கள் எவ்வித தடையுமின்றி ஹோர்முஸ் நீரிணையினூடாக உள்நோக்கியும் வெளிநோக்கியும் தங்களது பயணங்களை தற்போதும் வழமை போல் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire