106 தற்கொலை டிரோன்கள் ராணுவத்துக்கு வினியோகம்
12 ஆனி 2026 வெள்ளி 11:25 | பார்வைகள் : 982
டில்லியைச் சேர்ந்த எஸ்.எம்.பி.பி., நிறுவனம் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் டிரோன்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், 'காமிகேஸ்' ரக டிரோன்களை ராணுவத்துக்கு வினியோகித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
'அக்னிவேக்' என்ற பெயரில் 106 தற்கொலை ட்ரோன்களை ராணுவத்துக்கு வழங்கி உள்ளோம். இந்த டிரோன், மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. 180 கி.மீ., தொலைவு வரை தொடர்ந்து பறக்கும்.
எதிரிகளின் ராணுவ உள்கட்டமைப்புகள், தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் ரேடார் நிலையங்கள் போன்ற முக்கிய இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.பி.எஸ்., அமைப்பை குழப்பினாலும், முடக்க முயற்சித்தாலும் தடையின்றி இலக்கை அடையும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire