Paristamil Navigation Paristamil advert login

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

13 ஆனி 2026 சனி 06:25 | பார்வைகள் : 873


எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த  மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார். சத்யபாமாஆகியோரிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 7  நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவிட்டு உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில்  அதிமுக சார்பில்  மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமாரவேல், அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா,  பெருந்துரை தொகுதியில் ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்யபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

விஜய் தலைமையிலான தவெக அரசு மீது சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதன் பிறகு நான்கு பேரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு  தவெகவில் இணைந்தனர். அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டதால் அவர்கள் மீது ந டவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அதிமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இந்நிலையில்,  எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது குறித்து நான்கு பேரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் பிரபாகர்  நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அடுத்த 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில்  கூறப்பட்டு உள்ளது.