Paristamil Navigation Paristamil advert login

எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!!

எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!!

15 ஆனி 2026 திங்கள் 21:48 | பார்வைகள் : 2337


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தத்திற்குப் பின்னர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது. தற்போது ஒரு பேரல் பெட்ரோலின் விலை சுமார் 83 அமெரிக்க டாலர் அளவில் நிலவி வருகிறது. இந்த நிலைமையைத் தொடர்ந்து, எரிபொருள் விலைகள் விரைவாக குறைய வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள் நேரடியாக நிவாரணம் பெறும் வகையில் எரிபொருள் நிலையங்களிலும் விலை குறைப்பு அமுல்படுத்தப்பட வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது.

இதனிடையே, அமைச்சர் Roland Lescure, Maud Brégeon மற்றும் Serge Papin ஆகியோர் நாளை 16ம் திகதி பெர்சி நகரில் எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் அவசர ஆலோசனை நடத்தவுள்ளனர். இதேவேளை, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன் பொதுமக்களுக்கு நேரடியாக சென்றடைய அரசு உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.

மேலும், “எரிபொருள் விலைகள் கண்டிப்பாக குறைய வேண்டும்” என வலியுறுத்திய ஜனாதிபதி மக்ரோன், சர்வதேச சந்தை விலைகள் வேகமாக சரிந்தாலும், விநியோக சங்கிலிகள் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும் எனவும் எச்சரித்தார். இதற்கிடையில், கடந்த சில வாரங்களாகவே எரிபொருள் விலைகள் குறையும் போக்கைக் காட்டி வருகின்றன. குறிப்பாக, டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை சராசரியாக ஒரு லிட்டருக்கு 2 யூரோக்களுக்கு கீழ் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3