10 மில்லியன் யூரோக்கள் நுழைவுச்சீட்டு மோசடி: நீதிமன்ற விசாரணையில் லூவர் அருங்காட்சியக பணியாளர்!!
13 வைகாசி 2026 புதன் 16:56 | பார்வைகள் : 2012
பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மிகப்பெரிய நுழைவுச்சீட்டு மோசடி விவகாரத்தில், அங்கு பணியாற்றிய ஒருவருக்கு எதிராக நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல மில்லியன் யூரோக்கள் இழப்பை ஏற்படுத்திய இந்த மோசடியில் அவர் தொடர்புடையவராக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். “குழுவாகச் செய்யப்பட்ட மோசடி” மற்றும் “ஊழல்” உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
பரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் தகவலின்படி, 2025 ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் கீழ் மேலும் ஆறு பணியாளர்கள் காவலில் எடுக்கப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், ஒருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. முன்னதாக கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தமை காரணமாகவே இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி வழக்கில் இதுவரை ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உலகின் அதிக பார்வையாளர்கள் வருகை தரும் லூவர் அருங்காட்சியகத்திற்கு 10 மில்லியன் யூரோக்களுக்கு மேற்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் அருங்காட்சியக பணியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மோசடி வலையமைப்பை ஒருங்கிணைத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரும் அடங்குகின்றனர். மேலும் மோசடி மூலம் கிடைத்த பணம் பிரான்ஸ் மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களில் முதலீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan