காற்றில் பறந்த மனிஷ் பாண்டே- கேட்ச் பார்த்து வாயடைத்து நின்ற விராட் கோலி
14 வைகாசி 2026 வியாழன் 14:37 | பார்வைகள் : 1765
KKR மற்றும் RCB அணிகளுக்கு இடையிலான போட்டியில் மனிஷ் பாண்டே பிடித்த அபாரமான கேட்ச் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
13.05.2026 ராய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய RCB வீரர் விராட் கோலி 60 பந்துகளில் 105 ஓட்டங்கள் குவித்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.
இந்த போட்டியில் ஆர்.சி.பி அணி 193 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்தி விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது கார்த்திக் தியாகி வீசிய பந்தை டிம் டேவிட் பேக்வேர்ட் பாயிண்ட் திசையில் வேகமாக அடிக்க அது சிக்ஸரை நோக்கி பறந்தது. ஆனால் துரிதமாக செயல்பட்ட மனிஷ் பாண்டே இடது பக்கமாக காற்றில் பறந்து ஒற்றை கையால் அதனை கேட்ச் பிடித்தார்.
மனிஷ் பாண்டேவின் இந்த கேட்ச் பார்த்து மைதானத்தில் இருந்த ஒட்டு மொத்த ரசிகர்களும் திகைத்து நின்றனர்.
பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி தலையில் கை வைத்து திகைத்து போய் நிற்க, விராட் கோலி ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire