ரஷ்யா தன் தாக்குதல் போரைக் எப்படி முடிப்பது என்று தெரியவில்லை: மக்ரோன் குற்றச்சாட்டு!!
14 வைகாசி 2026 வியாழன் 18:15 | பார்வைகள் : 2989
ரஷ்யா வியாழக்கிழமை உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்கள் தாக்கப்பட்டதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன், சுமார் நாற்பது பேர் காயமடைந்தனர். உக்ரைன் வான்படை தகவலின்படி, ரஷ்யா 675 ட்ரோன்களையும் 56 ஏவுகணைகளையும் ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்தார். ரஷ்யா “தன் தாக்குதல் போரை எவ்வாறு முடிப்பது என்று அறியாமல் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது” என்று அவர் கூறினார். மேலும், பிரான்ஸ் தொடர்ந்து உக்ரைனுக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் “சமீபத்திய பலவீனமான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா எவ்வளவு போலித்தனமாக நடந்துகொண்டது என்பதையும் இது காட்டுகிறது. பொதுமக்கள் மீது குண்டுவீசுவதன் மூலம், ரஷ்யா தன் வலிமையை அல்ல, பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது. போர்க்களத்தில் தீர்வுகள் இல்லாமல், தனது தாக்குதல் போரை முடிக்க முடியாமல் தவிக்கிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி, மக்ரோனின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். ஐரோப்பா தனது வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேசமயம், தெற்கு உக்ரைனில் ஐ.நா. மனிதாபிமான உதவி வாகனம் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் கூறப்பட்டது.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், அமைதி முயற்சிகளை ரஷ்யா வெளிப்படையாக அவமதிக்கிறது என்று குற்றம்சாட்டினார். அமெரிக்காவின் நடுவர்தன்மையில் நடைபெற்றுவரும் ரஷ்யா–உக்ரைன் பேச்சுவார்த்தைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய தாக்குதல் உலகளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire