விளையாட்டு வீரர்களுக்கு அரசியல் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது — பாரிஸ் நகர முதல்வர்!
16 வைகாசி 2026 சனி 10:52 | பார்வைகள் : 2852
ஒருசெவ்வியில், பிரான்ஸ் கால்பந்து அணியின் கிலியோன் எம்பாப்பே (Kylian Mbappé) வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு assemblement National (RN) வெற்றிபெறும் ஆபத்தை, தனது கவலைகளை வெளிப்படுத்தினார்.
இந்த கருத்துக்கு எதிராக RN தலைவர்கள் பதிலளித்த நிலையில், பரிஸ் நகரின் புதிய நகர முதல்வர் எமானுவல் கிறகொறி (Emmanuel Grégoire), வெள்ளிக்கிழமை Mbappé‑க்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்தார்.
எம்பாப்பே : “நாம் குடிமக்கள் — எங்கள் குரலை வெளிப்படுத்த உரிமை உண்டு”
“RN போன்றவர்கள் அதிகாரத்தில் வந்தால், என் நாட்டுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நான் அறிவேன்.
நாம் குடிமக்கள்.மற்றவர்களைப் போல நாமும் எங்கள் குரலை வெளிப்படுத்த உரிமை பெற்றவர்கள்.”
எனத தெரிவித்திருந்தார்:
இந்த கருத்து RN‑இன் பல பதில்களை தூண்டியது, அதில் முக்கியமானது RN தலைவர் ஜோர்தான் பார்தெல்லாவின் கிண்டல்.
ஜோர்தான் பார்தெல்லா PSG‑ஐ குறித்த நையாண்டி
எம்பாப்பேயின் கருத்தை குறிப்பிட்டு,
எம்பாப்பேயின் PSG‑யை விட்டு சென்றால் என்ன நடக்கும் என நான் அறிவேன் :
கிளப் Champions League வெல்லும்! (மற்றுமொரு முறை கூட விரைவில் வெல்லலாம்.)”
இது எம்பாப்பேயின் அரசியல் கருத்துக்கு நேரடி பதிலாகக் கருதப்பட்டது.
பாரிஸ் நகர முதல்வர் “விளையாட்டு வீரர்களுக்கு அரசியல் உரிமை உண்டு” என ஆதரவு தெரிவித்தார்.
அவர் X ல்
“விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் —
அனைவருக்கும் அரசியல் கருத்து தெரிவிக்கும் உரிமையும்,
நியாயத்தன்மையும் உள்ளது.
RN மற்றும் வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக
தெளிவாக நிலை கொண்ட
Grand Paris‑ன் மகன்கிலியோன் எம்பாப்பேக்கு
முழு ஆதரவு.”
என எழுதியுள்ளார்.
இது ஒரு X போராகவே உள்ளது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire