Nestlé Waters நிறுவனத்தின் Perrier மற்றும் Vittel தளங்களில் சோதனை: நுகர்வோரை ஏமாற்றுதல் குற்றச்சாட்டு!!
19 வைகாசி 2026 செவ்வாய் 14:54 | பார்வைகள் : 3163
“நுகர்வோரை ஏமாற்றுதல்” என்ற குற்றச்சாட்டில் Foodwatch என்ற தன்னார்வ அமைப்பு அளித்த புகாரைத் தொடர்ந்து, பரிஸ் பொது சுகாதார பிரிவு நீதித்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மே 19 செவ்வாய்க்கிழமை Nestlé Waters நிறுவனத்தின் பல தளங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன என்று Radio France தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த சோதனைகள் குறிப்பாக Vergèze பகுதியில் உள்ள Perrier உற்பத்தி ஆலையிலும், Vittel பகுதியில் உள்ள நீர்தர ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டு மையத்திலும் நடைபெற்று வருகின்றன. சுமார் 40 மோசடி தடுப்பு அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். Nestlé Waters நிறுவனம், “பிரான்சில் உள்ள எங்கள் இரண்டு தளங்களில் திடீர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன; அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக Radio France மற்றும் Le Monde வெளியிட்ட தகவலின்படி, இயற்கையாக தூய்மையானதாக இருக்க வேண்டிய கனிம நீர்களில் பக்டீரியாக்கள் மற்றும் வேதிப்பொருள் தடயங்கள் இருந்தபோதிலும், அவற்றுக்கு தடை செய்யப்பட்ட சுத்திகரிப்பு முறைகள் பயன்படுத்தப்பட்டதாக அந்த சுவிஸ் நிறுவனம் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire