ஆறாவது உலகக்கிண்ணத்தில் களமிறங்கும் ரொனால்டோ
21 வைகாசி 2026 வியாழன் 14:02 | பார்வைகள் : 1451
கார் விபத்தில் உயிரிழந்த டியாகோ ஜோடாவுக்கு மரியாதை அளிக்கும் விதமாக போர்த்துக்கல் தங்கள் அணியை அறிவித்துள்ளது.
ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து தொடர் ஜூன் மாதம் தொடங்குகிறது. கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) போர்த்துக்கல் அணிக்காக 6வது முறையாக இதில் களமிறங்குகிறார்.
2006ஆம் ஆண்டு முதல் உலகக்கிண்ணத் தொடர்களில் பங்கேற்று வரும் ரொனால்டோவுக்கு இது கடைசி சீஸனாக இருக்கும் என்று கருதப்படுவதால், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலுடன் இத்தொடரை எதிர்நோக்கியுள்ளனர்.
கார் விபத்தில் உயிரிழந்த தங்கள் வீரர் டியாகோ ஜோடாவுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, கால்பந்து உலகக்கிண்ணத்திற்கான போர்த்துக்கல் அணியில் 27+1 வீரர்கள் எனக் குறிப்பிட்டு, அவரது பெயரையும் சேர்த்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
போர்த்துக்கல் அணி நிர்வாகத்தின் இந்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளதால், பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire