பிளே ஆப் கனவை தக்கவைத்த பஞ்சாப் கிங்ஸ்! 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
24 வைகாசி 2026 ஞாயிறு 13:13 | பார்வைகள் : 1712
லக்னோ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
2026 ஐபிஎல்லில் 68வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 196 ஓட்டங்கள் குவித்தனர்.
லக்னோ அணியில் அதிகபட்சமாக ஜோஷ் இங்க்ஸில் 44 பந்துகளில் 72 ஓட்டங்கள் குவித்தார். அவரை தொடர்ந்து ஆயுஷ் படோனி 18 பந்துகளில் 43 ஓட்டங்கள் குவித்து அசத்தினர்.
197 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் 69 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான மிக முக்கியமான ஆட்டமாக கருதப்படும் இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 101 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் 4 இடத்திற்கு பஞ்சாப் அணி முன்னேறியுள்ளது.
அத்துடன் பிளே ஆப் சுற்றுக்கான தனது வாய்ப்பை பஞ்சாப் அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire