Île-de-France: கடும் வெப்பம் காரணமாக ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்ற பதினாறு பேர் மருத்துவமனையில் அனுமதி!!
24 வைகாசி 2026 ஞாயிறு 22:37 | பார்வைகள் : 3487
பரிஸ் மற்றும் Île-de-France பகுதியில் ஏற்பட்ட கடும் வெப்பத்தால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓட்டப்பந்தயங்கள் சோகமாக மாறின. பரிஸ் 20வது வட்டாரத்தில் நடைபெற்ற “La Pyrénéenne” 10 கிலோமீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற சுமார் 50 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு ஓட்டத்தின் போது இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவ உதவி குழுவினர் தெரிவித்தனர்.
இதே நாளில், Val-de-Marne பகுதியில் உள்ள Maisons-Alfort நகரில் நடைபெற்ற “La Maisonnaise” ஓட்டத்தில் பத்து பேர் அவசர தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆறு பேர் குறைந்த அவசர நிலையில் சிகிச்சை பெற்றனர். இந்த உடல்நலப் பிரச்சினைகளுக்கு கடும் வெப்பமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் நகர மேயர் Emmanuel Grégoire இந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். விளையாட்டு அமைச்சர் Marina Ferrari கடும் வெப்பத்தில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அதிக கவனம் தேவை என எச்சரித்துள்ளுர்.
France நாடு கடந்த சில நாட்களாக அசாதாரண வெப்ப அலைக்குப் பாதிக்கப்பட்டுள்ளது. Météo-France தகவலின்படி, இந்த வெப்பம் வாரத்தின் தொடக்கத்தில் மேலும் அதிகரிக்கும். Île-de-France பகுதியில் காற்றுத் தரமும் மோசமடைந்துள்ளது; ஓசோன் மாசு அதிகமாக இருப்பதாகவும் Airparif தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire