சமூக உதவித் தொகை ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரிப்பு !!
25 வைகாசி 2026 திங்கள் 07:50 | பார்வைகள் : 3513
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 2018ம் ஆண்டு வழங்கிய முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக சமூக நல உதவித் தொகைகளை ஒருங்கிணைக்கும் திட்டம் அமைந்திருந்தது. தற்போது “ஒற்றுமைப்படுத்தப்பட்ட சமூக உதவித்தொகை” (ASU) தொடர்பான சட்டமூலத்தை முன்னெடுக்க பிரதமர் Sébastien Lecornu அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக அரசின் பேச்சாளர் Maud Bregeon தெரிவித்துள்ளார். எனினும், அரசியல் கட்சிகளுடனும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடனும் மேலதிக ஆலோசனைகள் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ASU திட்டம் முன்னதாக “ஒற்றை சமூக உதவித்தொகை” என்ற பெயரிலும் பேசப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர்களான Michel Barnier மற்றும் François Bayrou ஆகியோரின் காலத்தில் இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அமைச்சர் Laurent Panifous கடந்த பெப்ரவரி மாதத்தில் தேசிய சபை தலைவருக்கு எழுதிய கடிதத்தில், மே மாதத்திற்குள் சட்டமூலம் கீழ்சபையில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது கோடைகால இடைவேளைக்கு முன் அந்தச் சட்டமூலம் விவாதத்திற்குக் கொண்டு வரப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழிலாளர் அமைச்சர் Jean-Pierre Farandou, சட்டமூலத்தின் எதிர்காலம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, உள்ளூராட்சி அமைப்புகளின் நிர்வாக சுதந்திரம் தொடர்பாக Conseil d'Etat முன்வைத்துள்ள எதிர்ப்புகள் குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, வறுமை ஒழிப்பு அமைப்புகளும் இந்த திட்டம் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகளை குறைக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire