இலங்கையில் சோகம் - மாணவியை காப்பாற்ற சென்று உயிரிழந்த ஆசிரியர்
26 வைகாசி 2026 செவ்வாய் 13:39 | பார்வைகள் : 1693
கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிந்த கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
கிரிந்த கடலில் நீராடச் சென்ற ஒரு குழுவினர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர் காக்கும் பிரிவின் உத்தியோகத்தர்களால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழுவினர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதன்போது ஆபத்தான நிலையில் இருந்த ஆசிரியர் ஒருவரும் சிறுமியும் சிகிச்சைக்காக கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் படல்கும்பர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆசிரியர் என தெரியவந்துள்ளது.
படல்கும்பர பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் சிலரும் மாணவர் குழுவொன்றுமே இவ்வாறு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக திஸ்ஸமஹாராம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire