துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி: எடப்பாடி பழனிசாமி
2 ஆடி 2026 வியாழன் 12:28 | பார்வைகள் : 1462
எடப்பாடி பழனிசாமி ஆலோசனைசென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மகளிர் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தை எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளனர். இருவருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கிய பின்பும் இபிஎஸ் மீது உள்ள அதிருப்தியால் கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.இந்த கூட்டத்தில் அரசியல் களப்பணிகள் மற்றும் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் மகளிர் அணியின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவது, மக்கள் சந்திப்புப் பணிகளை அதிகரிப்பது மற்றும் பெண்களுக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
மகளிர் அணியினரின் தீவிரப் பங்களிப்பு கட்சியின் வெற்றிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்தினார்..துரோகிகள்அதிமுக மகளிரணி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருக்கின்றனர்; அரை நூற்றாண்டு கண்ட அதிமுகவை அழித்துவிடலாம் என நினைத்தால் அது முடியாது. மக்கள் அதிமுகவிற்கு தான் வாக்களித்து ஒவ்வொருவரையும் எம்.எல்.ஏ.வாக ஆக்கினார்கள். இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து சிலர் தங்கள் கட்சியில் இணைக்கிறார்கள். இப்படி ஒரு ஆட்சியை நடத்த முதல்-அமைச்சர் விஜய்க்கு அருகதை உள்ளதா?. என்று கூறினார்.
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire