அமைதியை நோக்கிய பாதையில் முன்னின்று உலகை வழிநடத்துவோம்: பிரதமர் மோடி
3 ஆடி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 1470
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நோக்கிய பாதையில் முன்னின்று உலகை வழிநடத்துவோம் என ஜப்பான் பிரதமர் டகாய்ச்சியை சந்தித்த பிறகு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் பிறகு இரு நாட்டு பிரதமர்களும் நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவிற்கு முதல்முறை வந்துள்ள எனது இளைய சகோதரி ஜப்பான் பிரதமர் டகாய்ச்சியை நான் வரவேற்கிறேன்.. அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமர். கொள்கை மற்றும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரான்சில் நடந்த ஜி7 மாநாட்டில், இன்றைய உலகளாவிய சிக்கலான சூழலில் பரஸ்பர நம்பிக்கையே நமது மிகப்பெரிய சொத்து என்று கூறியிருந்தேன். இந்த அளவுகோளில், இந்தியா ஜப்பான் இடையிலானஉறவு முழுமையாக சோதிக்கப்பட்டுள்ளதை கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன்.
இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் ஜப்பானுக்கு முக்கிய பங்கு உண்டு.ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை வாயிலாக சர்வதேச ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம் துவங்கி உள்ளது. இன்று இரு நாடுகளும் உலகின் மிகப்பெரிய ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளன. விதிமுறைகள் அடிப்படையிலான இந்தோ பசுபிக் அமைய வேண்டும் என்பதே நமது விருப்பம். இந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற நிலையில், நாங்கள் மிகப்பெரிய முன்னெடுப்புகளை எடுத்துள்ளோம். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நோக்கிய பாதையில் முன்னின்று உலகை வழிநடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின்னர் ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி கூறியதாவது:
இந்தியாவும் ஜப்பானும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள். சுதந்திரமான,வளர்ச்சி அடைந்த விதிகள் அடிப்படையில் இந்தோ பசிபிக் இருக்க வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் சந்தை பொருளாதாரங்கள் என்ற அடிப்படையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துள்ளோம். இதன் வாயிலாக ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் அமைதி, வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire