குதிரை பேரம் என்கிற இழிவான வேலையை துவங்கியதே திமுக தானே? வைகோ
3 ஆடி 2026 வெள்ளி 06:13 | பார்வைகள் : 1259
குதிரை பேரம் என்கிற இழிவான வேலையை தொடங்கியதே திமுக தானே? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது பேட்டி: குதிரை பேரம் என்கிற இழிவான வேலையை தொடங்கியதே திமுக தானே? மதிமுக சார்பில் கம்பம் தொகுதியில் வென்ற ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வைத்தீர்களே, அது என்ன பெருச்சாளி பேரமா? இந்த மாதிரி வேலையை செய்ததே நீங்கள் தானே? இப்பொழுது அதிமுக மீது குற்றம் சாட்டுகிறீர்கள்.
தமிழகத்தில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது. அதே சமயம், முதல்வர் விஜய் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்றுவரும் அரசியல் மாற்றத்துக்கு மதிமுக உறுதுணையாக இருக்கும். திமுக கூட்டணியில் இருந்தபோது எங்கள் கட்சி தொடர்ந்து அவமதிக்கப்பட்டது. சுயமரியாதையைக் காக்கவே கூட்டணியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. திமுக எங்களை முதுகில் குத்தவில்லை; நெஞ்சில் குத்திவிட்டார்கள். எங்கள் கட்சியினர் உறுதியுடன் இருக்கிறார்கள்.
எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பமாட்டார்கள். எங்கள உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி கட்டாயப்படுத்துனீங்களே. பிடிவாதம் பிடித்து நிற்கவைத்தார்கள். 5 ஆண்டுகளுக்கு விஜய் ஆட்சி தான் நடக்கும், அடுத்துவரும் தேர்தலிலும் விஜய் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆவார். திமுக ஆட்சியில் கொடிகட்டி பறந்த ஊழலை இல்லாமல் ஆக்கிவிட்டார் முதல்வர் விஜய். இந்த அரசை மக்கள் நேசிக்கிறார்கள். முன்பை விட இப்போது ஆதரவு கூடியுள்ளது. இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire