இந்தியாவின் பொருளாதாரத்தின் மரபணுவை மாற்றி அமைக்கிறோம்: பிரதமர் மோடி
3 ஆடி 2026 வெள்ளி 10:26 | பார்வைகள் : 1319
இந்திய பொருளாதாரத்தின் மரபணுவை மாற்றியமைத்து வருகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டில்லியில் இந்தியா - ஜப்பான் இடையிலான பொருளாதார மாநாடு நடந்தது. இம்மாநாட்டில், ஹரியானாவின் கார்கோட் நகரில் மாருதி சுசூகி நிறுவனத்தின் 4வது வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலையை இரு நாட்டு பிரதமர்களும் துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:
ஏராளமான நிறுவனங்கள் இந்தியா உடன் நீண்ட காலமாக உறவு வைத்துள்ளன. அதில் சில நிறவனங்களின் உறவு 100 ஆண்டுகளை தாண்டி நீடிக்கின்ன. இந்த மாநாட்டில் இணைந்துள்ள புதிய நண்பர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா ஜப்பான் இடையிலான உறவு சிறப்பானது. பொருளாதார ஒத்துழைப்பிற்கு மிகச்சிறந்தஉதாரணங்கள் உள்ளன. சுசூகி நிறுவனம் தயாரிக்கும் 3ல் 2 கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.ஜப்பானின் நிபுணத்துவம் மற்றும் முதலீடும், இந்தியாவின் வேகம் மற்றும் அளவும் இணையும் போது உலக நாடுகள் பலன்பெறும்.
சர்வதேச நுகர்வு குறைவு, வர்த்தக நிச்சயமற்றதன்மை மற்றம் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட தட காரணமாக, உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. கடந்த நிதியாண்டில் இந்தியாவின ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக ஜப்பானின் கைஜென் தத்துவமான தொடர்ந்து மேம்படுத்துதல் கொள்கையை பின்பற்றி வருகிறோம். இந்தியாவின் பொருளாதார டிஎன்ஏவை மாற்றியமைத்து வருகிறோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரி சீரமைப்பு, நிர்வாகம்,எளிதாக தொழில் செய்தலுக்கான அடுத்த தலைமுறை சீர்திருத்தத்தை செய்துள்ளோம். அனைத்து துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. முக்கியமான துறைகளில், ஊக்கத்தொகை அளிக்கிறோம். அதற்கான பலன்களை நீங்கள் அனுபவித்துள்ளீர்கள். இதனால், கடந்த 4 ஆண்டுகளில், ஜப்பான் வணிகத்திற்கு உகந்த இடமாக இந்தியா மாறி உள்ளதாக சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜப்பான் பிரதமர் டகாய்ச்சியும், நானும் நமது ஒத்துழைப்பை இன்னும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். பொருளாதார பாதுகாப்பு,ஏஐ, பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இதனால் இந்த துறைகளில் ஒத்துழைப்பு என்பது அளப்பரியதாக இருக்கும்.அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில்ஜப்பானின் முதலீடு 10 டிரில்லியன் யென்னையும், ஜப்பான் நிறுவனங்களின் எண்ணிக்கை இரு மடங்காகவும் அதிகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire