பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவகங்களில் Tickets-restaurants பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!
3 ஆடி 2026 வெள்ளி 15:43 | பார்வைகள் : 2764
உணவக வவுச்சர்கள் (Tickets-Restaurants) தொடர்பான புதிய சட்ட முன்மொழிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், தற்போது தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள பல்பொருள் அங்காடிகளில் உணவக வவுச்சர்களைப் பயன்படுத்தும் உரிமையை நிரந்தரமாக்குவதாகும். மேலும், 2028 முதல் அனைத்து காகித வவுச்சர்களையும் நீக்கி, முழுமையாக மின்னணு (டிஜிட்டல்) வடிவத்திற்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அரிசி, பாஸ்தா, எண்ணெய், மாவு போன்ற உணவுப் பொருட்களை சூப்பர்மார்க்கெட்டுகளில் தொடர்ந்து வாங்க முடியும். ஆனால், மதுபானங்கள், இனிப்புப் பொருட்கள், குழந்தை உணவுகள் மற்றும் செல்லப்பிராணி உணவுகள் போன்ற சில பொருட்களை வாங்க அனுமதி வழங்கப்படாது.
உணவக உரிமையாளர்கள், சூப்பர்மார்க்கெட்டில் நாளாந்த உச்சவரம்பை €15 ஆகவும், உணவகங்களில் தற்போதுள்ள €25 வரம்பைத் தொடரவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய அரசு இந்த யோசனைக்கு முழுமையாக ஆதரவு அளிக்கவில்லை என்றாலும், நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.
மேலும், பயன்படுத்தப்படாத உணவக வவுச்சர்களை உணவு உதவி வழங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதேபோல், தற்போது தடை செய்யப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த வவுச்சர்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் அரசாணை, சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு வெளியிடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire