ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தணிவு : தாயகம் திரும்பும் Charles de Gaulle போர்க்கப்பல்!!
4 ஆடி 2026 சனி 07:30 | பார்வைகள் : 1980
ஈரான் தொடர்பான பதற்றநிலை தணிந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் பணியில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான Charles de Gaulle மீண்டும் தனது தாய்துறைமுகமான Toulon நகருக்கு திரும்பி வருவதாக ஜனாதிபதி Emmanuel Macron அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பெப்ரவரி மாதம் ஈரானை தாக்கியதையடுத்து இந்த போர்க்கப்பல் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தெஹ்ரான் – வாஷிங்டன் இடையிலான உடன்பாட்டின் பின்னர் நிலைமை ஓரளவு சுமுகமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக பிரான்ஸின் இரண்டு கண்ணிவெடி அகற்றும் கடற்படை கப்பல்கள் அண்மையில் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை தேவையான சந்தர்ப்பத்தில் உடனடி நடவடிக்கைக்கு தயாராக உள்ளதாக Emmanuel Macron குறிப்பிட்டுள்ளார். மேலும், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு பாதுகாப்பு கப்பல்களும் நீர்மூழ்கி ட்ரோன்களும் அப்பகுதியில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
ஜூன் மாதம் 17ஆம் திகதி Versailles நகரில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், ஈரான் தனது கடற்கரையை ஒட்டிய ஒரே கடற்பாதையை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. அதனை மீறும் கப்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மீண்டும் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்படலாம் என எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire