Paristamil Navigation Paristamil advert login

இன்று மாலை 7 மணி முதல் பல மெட்ரோ மற்றும் RER A நிலையங்கள் மூடப்படும்!!

இன்று மாலை 7 மணி முதல் பல மெட்ரோ மற்றும் RER A நிலையங்கள் மூடப்படும்!!

4 ஆடி 2026 சனி 15:06 | பார்வைகள் : 3454


இன்று மாலை நடைபெறும் கனடா–மொராக்கோ மற்றும் பராகுவே–பிரான்ஸ் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களால் பரிஸ் காவல் துறை இன்று மாலை 7 மணி முதல் சாம்ப்ஸ்-எலிசேஸ் (Champs-Élysées) பகுதியைச் சுற்றியுள்ள பல மெட்ரோ மற்றும் RER A நிலையங்களை மூட முடிவு செய்துள்ளது.

பிரான்ஸ் நேரப்படி மாலை 7 மணிக்கு மொராக்கோ அணி கனடாவை எதிர்கொள்கிறது. இரவு 11 மணிக்கு பிரான்ஸ் அணி பராகுவேவை எதிர்கொள்கிறது.

மூடப்படும் பாதைகள்: மெட்ரோ 1, 2, 6, 8, 12 மற்றும் RER A. பாதிக்கப்படும் நிலையங்கள்:

  • Concorde
  • Argentine
  • Charles de Gaulle – Étoile
  • Tuileries

இந்த நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுவது காவல் துறையின் அனுமதியைப் பொறுத்தது என்று RATP தெரிவித்துள்ளது. பிரான்ஸ் போட்டி முடியும் நேரத்தைப் பொறுத்து, மீண்டும் திறக்க பல மணி நேரம் ஆகலாம் அல்லது அன்றைய சேவை முடியும் வரை திறக்கப்படாமலும் இருக்கலாம்.

“கடுமையான அபாயம்”

இதற்கிடையில், 2026 உலகக் கோப்பை கால்பந்தின் 16 அணிகள் சுற்றுப் போட்டிகளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை வரை ட்ரோன்களில்  பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் காட்சிகளை பதிவு செய்து, சேகரித்து, நேரடியாக அனுப்ப அனுமதிக்கும் உத்தரவை பரிஸ் காவல் துறை வெளியிட்டுள்ளது.

அந்த உத்தரவில், போட்டிகளுக்கு முன்போ, போட்டிகளின் போதோ அல்லது போட்டிகள் முடிந்த பின்னரோ, மொராக்கோ மற்றும் பிரான்ஸ் அணிகளின் ரசிகர்கள் சாம்ப்ஸ்-எலிசே மற்றும் Trocadéro பகுதிகளில் பெருமளவில் கூடக்கூடும் என்றும், குறிப்பாக பட்டாசுகள் மற்றும் பிற வெடிமருந்து பொருட்களை பயன்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "பெரிய கால்பந்து போட்டிகளின் இறுதிக்கட்ட ஆட்டங்கள் நடைபெறும் காலங்களில், சாம்ப்ஸ்-எலிசே, ட்ரோகடெரோ மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்படுதல், வன்முறை சம்பவங்கள் மற்றும் பொது ஒழுங்கு பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுகின்றன" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3