Paristamil Navigation Paristamil advert login

மேகதாதுவில் 12,500 ஏக்கர் காடு அழிப்புக்கு ராகுல் எதிர்ப்பு தெரிவிப்பாரா; அன்புமணி

மேகதாதுவில் 12,500 ஏக்கர் காடு அழிப்புக்கு ராகுல் எதிர்ப்பு தெரிவிப்பாரா; அன்புமணி

5 ஆடி 2026 ஞாயிறு 06:34 | பார்வைகள் : 1176


நிக்கோபார் திட்டம் வந்தால் காடு அழிக்கப்படும் என்று கூறிய ராகுல், மேகதாது அணைக்காக 12 ஆயிரத்து 500 ஏக்கர் காடு அழிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா,'' என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேகதாது அணையை தடுப்போம்; காவிரியை காப்போம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி தஞ்சாவூரில் பேசியதாவது: கர்நாடகாவின் குறுக்கே மேகதாதுவில், அம்மாநில அரசு தடுப்பணையை கட்டினால், தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது.

இதனால், தமிழகத்துக்கு குடிநீர் மட்டுமில்லாமல், பாசன நீரும் கிடைக்காது. தமிழகம் பாலைவனமாக மாறும். டெல்டா விவசாயிகள் மீண்டும் எலிக்கறி உண்ணும் அளவுக்கு தள்ளப்படுவார்கள்.

மேகதாதுவில், அணை கட்டுவதற்காக, 12,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட காடுகள் அழிக்கப்படவுள்ளது. அந்தமானில் கிரேட்டர் நிக்கோபார் திட்டம் வந்தால் காடுகள் அழிக்கப்படும் என எதிர்த்த எதிர்கட்சித் தலைவர் ராகுல், மேகதாதுவில் அணை கட்டினால் காடுகள் அழிக்கப்படும் என்று அதற்கும் குரல் கொடுக்க வேண்டும்.

அவர் கூறினால் அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் கேட்பார்கள். இங்குள்ள பொதுமக்கள் மேகதாது அணை கட்டக்கூடாது என சமூக வலைதளங்கள் மூலம் ராகுலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3