Paristamil Navigation Paristamil advert login

இந்தியா-அமெரிக்கா நட்புறவு உலக நலன்களின் உந்து சக்தி: பிரதமர் மோடி

இந்தியா-அமெரிக்கா நட்புறவு உலக நலன்களின் உந்து சக்தி: பிரதமர் மோடி

5 ஆடி 2026 ஞாயிறு 08:42 | பார்வைகள் : 1546


இந்தியா, அமெரிக்காவின் நட்புறவு உலக நலன்களின் உந்து சக்தியாக மாறி உள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

அமெரிக்காவின் 250வது சுதந்திர தினம் இன்று (ஜூலை 4) கொண்டாடப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன.

இந் நிலையில், அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு அவர் வாழ்த்துகளை கூறி உள்ளார்.

பிரதமர் மோடியின் பதிவு;

140 கோடி இந்திய மக்களின் சார்பில், அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் டிரம்ப், அமெரிக்க நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இருக்கும் உறவானது ஒரு உத்திசார் கூட்டாண்மைக்கும் அப்பாற்பட்டதாகும். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் நம்பிக்கை ஆகியவை நமது நட்பை உலக நாடுகளுக்கு ஒரு உந்துசக்தியாக மாற்றி இருக்கிறது.

அடுத்த 250 ஆண்டுகளுக்கு சிறப்பாக, செழிப்புடன் கூடிய அமைதி, முன்னேற்றம் அமெரிக்காவுக்கு கிடைக்கும். இந்தியா-அமெரிக்காவின் கூட்டாண்மையை புதிய உயரங்களுக்கும் இட்டுச் செல்லும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3