தொழில்நுட்ப புரட்சியை இந்திய இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள்: பிரதமர் மோடி
5 ஆடி 2026 ஞாயிறு 09:45 | பார்வைகள் : 1339
மேட் இன் இந்தியா மூலம் தயாரிக்கப்பட்ட சிப்கள் மூலம் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப புரட்சியை இந்திய இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் சனந்த் மாவட்டத்தில் செமிகண்டக்டர் குறித்த தொழிற்சாலையை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
முதலில் பொருட்கள், பின்னர் உதிரி பாகங்கள் தயாரித்த இந்தியா தற்போது செமி கண்டக்டர்களை தயாரித்து வருகிறது. இந்தியா முழுமையான மின்னணுவியல் மதிப்பு சங்கிலியை உருவாக்கி வருகிறது.
மேட் இன் இந்தியா மூலம் தயாரிக்கப்பட்ட சிப்கள் மூலம் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப புரட்சியை இந்திய இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள்.
ஒரு காலத்தில் சைக்கிள் தயாரிக்கும் நிறுவனம் இந்தியா வந்தாலே கொண்டாடிய காலம் உண்டு. ஆனால், இன்று போர் விமானங்கள் தயாரிக்க நிறுவனங்கள் இந்தியா வருகின்றன.
உலகின் தொழில்துறை வரலாற்றை பார்த்தால், ஒன்று தெளிவாக தெரியும். உலகளாவிய தொழிற்துறை சக்தியும் ஒரே ஒரு தொழிற்சாலையின் மீது அமைக்கப்படவில்லை. தொழில்துறையின் அடித்தளம் தொழிற்சாலைகளின் தொகுப்புகளில் தான் உள்ளது. அமெரிக்காவின்சிலிக்கான் பள்ளத்தாக்கு, தைவானின் சின்சு அறிவியல் பூங்கா ஜப்பானின் சிலிக்கான் தீவு மற்றும் சுகுபா அறிவியல் நகரம் ஆகியவை அனைத்தும் தொழில்துறை தொகுப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன. சனந்த் பகுதியும் இப்போது அதே திசையில் தான் பயணிக்க துவங்குகிறது.
மொபைல்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இன்று இந்தியா உலகின் 2வது இடுத்தை பிடித்துள்ளது. 2014 ல் இருந்ததை விட இன்று மின்னணு பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்றுமதி 11 மடங்கு அதிகரித்துள்ளது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள செமி கண்டக்டர் ஆலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 20 கோடி சிப்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த சாதனையை விரைவில் படைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆண்டுதோறும் 50 கோடி சிப்கள் உற்பத்தி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை விரைவில் அடைவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire