த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு சம்மன்!
5 ஆடி 2026 ஞாயிறு 13:45 | பார்வைகள் : 1559
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக கூறப்படும் வழக்கில், நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு, சென்னை போலீசார் 'சம்மன்' அளித்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 45; ஐ.பி.டி.எஸ்., என்ற கருத்துக் கணிப்பு நிறுவனம் மற்றும் 'யூ டியூப் சேனல்' நடத்தி வருகிறார் .
திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோருடன் இணைந்து, த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம், இவர் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக, சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக ஓட்டளிக்க, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ., இளையராஜாவிடம், 35 கோடி ரூபாய் பேரம் பேசியது அம்பலமானது.
விசாரணை இந்த பேரம் குறித்த ஆடியோ வெளியானதுடன், எம்.எல்.ஏ., இளையராஜாவும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
நடத்திய செ ன்னை திருவல்லிக்கேணி போலீசார், அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களான மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரைச் சேர்ந்த நரேஷ், கரூரைச் சேர்ந்த ரமேஷ், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.
அதை தொடர்ந்து, சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சீனிவாசன், பள்ளிக்கரணையைச் சேர்ந்த செல்வன், அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க, 180 கோடி ரூபாயில் சதித் திட்டம் தீட்டியது தெரியவந் தது. இதன் பின்ன ணியில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் இருப்பதாக, கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்தனர் .
அதன்படி, செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்கிடம் விசாரணை நடத்த, போலீசார் தேடி வந்தனர். இருவரின் மொபைல் எண்களும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு உள்ளன. இருவரும் தலைமறைவாகி விட்டதாக, திருவல்லிக்கேணி போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார், கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டி கிராமத்தில் உள்ள செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோரின் பூர்வீக வீட்டிற்கு நேற்று சென்றனர்.
அங்கிருந்த அவர்களது தந்தை வேலுச்சாமி, தாய் பழனியம்மாள் ஆகியோரிடம் சம்மன் அளித்தனர்.
அதில், இருவரும் நாளை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், ஆஜராகாதபட்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலைமறைவாக இருக்கும் இருவரும், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க, அவர்கள் தேடப்படும் குற்றவாளிகள் என்பதை அறிவிக்கும் வகையில், 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்துள்ளனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேரிடமும் தனித்தனியாக வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படியே, இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில், அவர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான உறுதியான ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளோம். கைதானவர்கள் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என்பதால், அவர்களின் வாக்குமூலங்கள், அவர்களுக்கான தொடர்பை உறுதி செய்துள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire