Paristamil Navigation Paristamil advert login

யார் தவறு செய்தாலும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்; அமைச்சர் ஆனந்த் உறுதி

யார் தவறு செய்தாலும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்; அமைச்சர் ஆனந்த் உறுதி

6 ஆடி 2026 திங்கள் 09:57 | பார்வைகள் : 1060


யார் தவறு செய்தாலும் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பார், என, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலருமான ஆனந்த் தெரிவித்தார்.


துாத்துக்குடியில்  நடந்த, த.வெ.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன் த.வெ.க., தலைவர் விஜய் துாத்துக்குடி வந்தபோது, மக்கள் பிரம்மாண்டமான வரவேற்பை கொடுத்தனர். இன்று அவர் முதல்வராக உள்ளார். தூத்துக்குடி மக்களுக்கு த.வெ.க. சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


நாங்கள் மக்களுக்கு உண்மையாக சேவை செய்வோம். யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கூடிய முதல்வராக விஜய் இருப்பார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் யாரும் தவறு செய்யாமல் மக்களுக்கு சேவை செய்வதை மட்டுமே நோக்கமாக வைத்துக் கொண்டு, அனைவரும் ஓர் ஊழியராக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3