Paristamil Navigation Paristamil advert login

எப்படியாவது ஆட்சிக்கு வர திமுக குதிரை பேர முயற்சி: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

எப்படியாவது ஆட்சிக்கு வர திமுக குதிரை பேர முயற்சி: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

6 ஆடி 2026 திங்கள் 10:01 | பார்வைகள் : 1121


எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக குதிரை பேர முயற்சிகளை திமுக நடத்தியிருப்பதாக தெரிகிறது என்று மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் கூறி உள்ளார்.

அவரது பேட்டி;

ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாங்கள் எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தான் இப்படிப்பட்ட குதிரை பேர முயற்சிகள் நடைபெற்று இருப்பதாக தெரிகிறது.

சிலநாட்களுக்கு முன்னால் விரைவில் ஆட்சி மாற்றம் என ஸ்டாலின் பேசியதின் பின்னணி என்ன என்பது இப்போது தான் தெரிகிறது.

தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளில் சில, 2 மாத கால தவெக அரசில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. சிங்கப்பெண் படை, விவசாய கடன் தள்ளுபடி என சில அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.

நிதிநிலை அறிக்கை வரும் போது முழுமையான, என்ன மாதிரியான பொருளாதார கொள்கையை தவெக அரசு கடைபிடிக்க போகிறது? திமுக ஆட்சியில் தொழிலாளர் பிரச்னை, பணி நியமனங்கள், ஆசிரியர் அரசு ஊழியர்கள் பிரச்னை போன்றவற்றில் என்ன மாதிரியான அணுகுமுறையை மேற்கொள்ள போகின்றனர் என்பது தெரியவரும்.

நிதிநிலை அறிக்கை வரும் வரை காத்திருக்கலாம். நிதிநிலை அறிக்கையின் மூலம் என்ன பாதையில் இந்த அரசு செல்ல போகிறது என ஓரளவு வெளிச்சம் கிடைக்கும்.


இவ்வாறு அவர் கூறினார். 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3