உண்மையான எதிரி யார் எனத் தெரியவில்லை: உதயநிதி
6 ஆடி 2026 திங்கள் 14:54 | பார்வைகள் : 1180
கடந்த தேர்தலில் நமது உண்மையான எதிரி யார் எனத் தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறினார்.
சென்னையில், திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களுக்காக போராடுவதும், சேவை செய்வதுமே முக்கியமான கடமை என திமுக நம்புகிறது. வெற்றியோ தோல்வியோ, மக்களுடன் நிற்பவர்களே கருணாநிதியின் தொண்டர்கள். அனைத்து வகையான வெற்றியையும், தோல்வியையும் திமுக பார்த்துள்ளது.
டிவியில் என்ன நடக்கிறது என பார்த்துள்ளோம். அதிமுகவை இரண்டாக உடைத்துள்ளனர். ஆனால், அவர்களால் திமுகவை தொட்டு பார்க்க முடியாது. ஆளுங்கட்சியை விட, திமுக எதிர்க்கட்சியாக சிறப்பாக பணியாற்றி வருகிறது.
ரீல்ஸ் வெளியிட்டு தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. ரீல்ஸ் மூலம் ஆட்சி நடத்தலாம் என நினைக்கின்றனர். எம்எல்ஏக்கள் முதல் முதல்வர் வரை அனைவரும் ரீல்ஸ் எடுக்கின்றனர். ரீல்ஸ் அரசை நடத்துகின்றனர்.
ஒவ்வொரு நாள் காலையில் எழுந்த உடன் அதிமுக உடன் இணைந்து ஆட்சி அமைக்க திமுக முயற்சி செய்ததாக கூறுகின்றனர். அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளனர்.எதற்கு அரசை கவிழ்க்க வேண்டும். மக்களை அரசை அகற்றுவார்கள். நம்மை, துஷ்ட சக்தி, ஊழல் சக்தி என பல பெயர்களில் அழைக்கின்றனர். ஆனால், நமது பெயரை சொல்ல தயங்குகின்றனர்.
கடந்த தேர்தலில் நமது உண்மையான எதிரி யார் எனத் தெரியவில்லை. நாம் யாரை தோற்கடிக்க வேண்டுமோ அவர்களை தோற்கடித்து விட்டோம். தெருத் தெருவாகவும் ஒவ்வொரு மாவட்டமாகவும் சென்று ஓட்டுகள் சேகரித்தோம். ஆனால், நமது வீட்டில் ஓட்டு சேகரிக்க மறந்துவிட்டோம். தற்போது உண்மையான எதிரி யார் என தெரிந்துவிட்டது. அடுத்த முறை அவர்களை அகற்றுவோம்.
நமது கட்சி ஓட்டுகள் மூலம் சிலர் அமைச்சர்கள் ஆகி உள்ளனர். தற்போது, சோபா அகற்றப்பட்டு விடும் என்பதால் அவர்கள் அமைதியாக உள்ளனர். உங்களின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பயப்படும் கட்சி திமுக இல்லை.
ஊழல் செய்தவர்கள் யாரையும் விட மாட்டோம் என அவர்( முதல்வர் விஜய்) சொன்னார். தற்போது அவர்களை தனது கட்சிக்கு அழைத்துக் கொண்டு உள்ளோம். சோபா மாடலின் ஒவ்வொரு தவறையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம். இவ்வாறு உதயநிதி பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire