Paristamil Navigation Paristamil advert login

கடும் வெப்ப அலை - 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

கடும் வெப்ப அலை - 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

6 ஆடி 2026 திங்கள் 07:30 | பார்வைகள் : 2480


 கடும் வெப்ப அலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஜூலை மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமையன்று நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளைச் சேர்ந்த 16 மாவட்டங்களுக்கு “செம்மஞ்சள்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக Météo-France அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வரை 7 மாவட்டங்களுக்கு மட்டுமே செம்மஞ்சள் எச்சரிக்கை இருந்த போதிலும், தற்போது அந்த எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Ardèche, Aude, Drôme, Gard, Hérault, Pyrénées-Orientales மற்றும் Vaucluse பகுதிகளில் ஏற்கனவே 40 பாகை வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் Charente, Charente-Maritime, Dordogne, Gironde, Landes, Lot, Lot-et-Garonne, Deux-Sèvres மற்றும் Vendée ஆகிய மாவட்டங்களுக்கும் திங்கட்கிழமை முதல் "செம்மஞ்சள்” எச்சரிக்கை பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.

திங்கட்கிழமை தென்மேற்கு பகுதிகளில் 36 பாகை முதல் 39 பாகை வரையும்,  Languedoc-Roussillon பகுதியில் 40 பாகை வரையும் வெப்பநிலை அதிகரிக்கும் என Météo-France எச்சரித்துள்ளது. மேலும் Île-de-France, sud de la Bretagne மற்றும் Val-de-Loire பகுதிகளிலும் 33 பாகை முதல் 36 பாகை வரை வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவை தாக்கிய வெப்ப அலைக்குப் பின்னர், ஜூன் மாதத்தில் நாட்டின் சராசரி வெப்பநிலைகள் புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3