ஐரோப்பாவில் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு - விமானங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
6 ஆடி 2026 திங்கள் 09:19 | பார்வைகள் : 1205
ஐரோப்பாவில் மவுண்ட் எட்னா(Mount Etna) இன்று மீண்டும் வெடிக்க தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவின் மிகவும் தீவிரமான எரிமலையான மவுண்ட் எட்னா(Mount Etna) இன்று அதிகாலை 7.45 மணிக்கு மீண்டும் வெடிக்க தொடங்கியது.
இந்த எரிமலை வெடிப்பை தொடர்ந்து அப்பகுதியை சுற்றிய வளிமண்டல பகுதி சாம்பல் மற்றும் புகை மூட்டத்தால் மூழ்கியது.
சிசிலியில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, கட்டானியா விமான நிலையம் தனது அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளது.
பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து ஆண்டு தோரும் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கு இந்த கட்டானியா விமான நிலையம் முக்கிய மையமாக உள்ளது.
ITA ஏர்வேஸ் என்ற இத்தாலியின் முன்னணி விமான நிறுவனம் கட்டானியா விமான நிலையத்திற்கான அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
மவுண்ட் எட்னா எரிமலையின் உச்சிப் பள்ளங்களை இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலை ஆய்வக நிறுவனம் ஆய்வு செய்து விமான பயணங்களுக்கான எச்சரிக்கை நிலையை சிவப்பாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு தொடர்பான புகைப்படங்களும் காணொளி காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire