Paristamil Navigation Paristamil advert login

நியூயார்க் நகரின் ஈஸ்ட் ஆற்றில் தரையிறங்கிய விமானம் - 8 பேரும் பத்திரமாக மீட்பு

நியூயார்க் நகரின் ஈஸ்ட் ஆற்றில் தரையிறங்கிய விமானம் - 8 பேரும் பத்திரமாக மீட்பு

6 ஆடி 2026 திங்கள் 11:02 | பார்வைகள் : 1223


அமெரிக்காவில் சிறிய ரக நீர்வழி விமானம்(seaplane) நியூயார்க் நகரின் ஈஸ்ட் ஆற்றில் அவசரகால தரையிறக்கம் செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் நகரின் ஈஸ்ட் ஆற்றில் சிறிய ரக நீர்வழி விமானம்(seaplane) அவசரமாக தரையிறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அவசரகால தரையிறக்கத்தின் போது விமானத்தில் 8 பேர் வரை பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமானத்தில் இருந்த 8 பேரும் சிறிய காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளது.

மேன்ஹாட்டன் மற்றும் புரூக்ளின் பகுதிக்கு இடையே விமானமானது மதியம் 12.01 மணியளவில் தரையிறங்கியதாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மீட்பு பணிகள் உடனடியாக முடுக்கி விடப்பட்டது, ஆற்றில் இறங்கிய போது விமானமானது நேராகவே இருந்தது. பின்னர் விமானம் இழுவை படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது.

 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3