பிரான்சில் சட்டவிரோத மனித கடத்தலுக்காக தண்டனை பெற்றவர்,போலி பெயரில் பிரித்தானியாவில் தஞ்சம்!!
6 ஆடி 2026 திங்கள் 17:26 | பார்வைகள் : 1952
பிரான்சில் 2016 ஆம் ஆண்டு மனிதக் கடத்தல் குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற Twana Jamal, தற்போது போலி அடையாளத்தில் பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரியவராக வாழ்ந்து வருவதாக BBC வெளியிட்ட விசாரணை தெரிவிக்கிறது. அவர் "பாசா" என்ற பெயராலும் அறியப்பட்டவர்.
Grande-Synthe அகதி முகாம்களில் முக்கிய மனிதக் கடத்தல் அமைப்பை வழிநடத்தியதாகக் கூறப்படும் அவர், ஒவ்வொரு புலம்பெயர்ந்தவரிடமிருந்தும் 5,000 முதல் 6,000 யூரோக்கள் வரை வசூலித்து, வாரத்திற்கு சுமார் 115,000 யூரோக்கள் வருமானம் ஈட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறைத்தண்டனை முடிந்தபின் அவர் நாடுகடத்தப்பட வேண்டியிருந்தது.
தற்போது இங்கிலாந்தின் Blaby நகரில் போலி அடையாளத்தில் வேலை செய்து, அகதித் தஞ்சம் கோரியவராக பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டில் 12 மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்களுக்கு தஞ்சம் மறுக்கப்பட வேண்டும் என்ற பிரித்தானிய சட்டம் இருந்தாலும், அவர் நாட்டுக்குள் நுழைந்திருப்பது எல்லைப் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
BBC-யின் விசாரணையில், பிரெக்சிட்டிற்குப் பிறகு வெளிநாட்டு குற்றப் பதிவுகளைச் சரிபார்ப்பது சிக்கலாகிவிட்டதாக குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர். ட்வானா ஜமால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மேலும், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் தண்டனை பெற்ற சில மனிதக் கடத்தல்காரர்களும் தற்போது பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரியவர்களாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire